மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! வானிலை மையம் சொன்ன புதிய தகவல்

9 August 2020, 9:43 am
Cbe Rain - Updatenews360
Quick Share

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு வாரமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. தேனி, கோவை, நீலகிரி என பல மாவட்டங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்குகிறது.

நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும், மரங்களும் சாய்ந்து பெருத்த சேதத்தை விளைவித்து வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆகையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்னமும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் மேலும் 2 நாட்களுக்கு மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டிய சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்ப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 12

0

0