2 நாட்கள்… 16 மாவட்டங்களில் கனமழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
5 August 2020, 2:19 pmசென்னை: 2 நாட்களில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னையில் 2 நாட்களாக மழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் மழை பதிவானது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் முழுவதுமே மழை பெய்து வருகிறது. கனமழையால் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை இடைவிடாது கொட்டி வருகிறது.
இந் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் உள்ளது.
அதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய மலை மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும். குறிப்பாக நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
0
0