அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

15 August 2020, 12:45 pm
RAIN 1 - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இந் நிலையில் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் எதிரொலியாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறி உள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதுதவிர, மேற்கு, வடக்கு, கிழக்கு பகுதிகளில் வரும் 18ம் தேதி மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும், எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.