போதையில் போலீஸாரை தாக்கிய போதை ஆசாமிகள் : போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து உடைத்து அட்டூழியம்…!!

15 June 2021, 5:17 pm
chennai attack - updatenews360
Quick Share

சென்னை : போதையில் போலீஸ் ஜீப் உள்பட 5 வாகனங்களை அடித்து சேதப்படுத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள ஐசிஎப் காலனியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். பின்னர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்றனர். அப்போது, கோகுலை தாக்கியவர்களில் ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஆனால், அவர்களிடம் இருந்து எஸ்கேப்பான அந்த நபர், மேலும் 4 இளைஞர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் போலீசாரிடம் வந்து தகராறு செய்துள்ளனர். அப்போது, கற்களை வீசி போலீசாரை தாக்குதல் நடத்தினர். பின்னர், அங்கிருந்த 2 ஆட்டோ, ஒரு கார், ஒரு வேன் மற்றும் போலீசாரின் ஜீப் ஆகிவற்றை கற்களால் அடித்து உடைத்து விட்டு, தலைமறைவாகி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட போலீசார், தலைமறைவான போதை ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபட்டு, காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் வலுக்கி விழுந்து, கைகால் முறிவு ஏற்படும் சம்பவங்கள் எதிர்நோக்கியுள்ளன.

Views: - 184

0

0