சென்னிமலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற சர்ச்சை பேச்சு எழுந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இங்குதான் கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோவிலானது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், சென்னிமலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கிறிஸ்துவ முன்னணி என்ற அமைப்பு பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னிமலை ஆண்டவர் குழு பொதுமக்கள் என்ற பெயரில் “சென்னிமலையை காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவி கொடிகளுடன் கலந்து கொண்டனர். அப்போது, சென்னிமலையை பாதுகாப்போம், முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, #சென்னிமலையை_காப்போம் என்ற ஹேஷ்டேக்குடன் பாஜக, இந்து முன்னணி மற்றும் பல இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் பதிவுகளை வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில், பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது எக்ஸ் பக்க பதிவில், ” சென்னிமலை எங்கள் மலை எங்கள் முருகன்.. எங்கள் அடையாளம் என எழுதியுள்ளார். தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், சென்னிமலையை கல்வாரி மலை, ஏசுமலை என பெயர்மாற்றம் செய்ய முயற்சி எடுக்கும் கிறிஸ்துவ முன்னனியை கண்டித்தும் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சனாதன (இந்து மத) ஒழிப்பு திராவிட மாடல் ஆட்சியை கண்டித்தும் மாபெரும் ஆர்பாட்டம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என குறிப்பிட்டுள்ளார்.
பகவர் பிரதீப் என்பவர், ‘கொங்கு நாட்டில் ஆரம்பமானது இந்து எழுச்சி’ என்ற தலைப்பிட்டு சென்னிமலை போராட்டங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் போராட்டம் தமிழக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.