இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது,அதிலும் குறிப்பாக CSK,MI,RCB அணிகள் ஆட்டத்தை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதையும் படியுங்க: மோசமான விபத்து..நொறுங்கிய கார்..உயிருக்கு போராடும் பிரபல பாலிவுட் நடிகரின் மனைவி.!
அந்த வகையில் வரும் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது.
தொடங்கிய சில மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதால், டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது,ஆன்லைன் மூலமாக டிக்கெட் வாங்குவது கடினமாக இருப்பதாகவும்,கூடுதல் கட்டணத்துடன் டிக்கெட்டுகள் பிளாக் மார்க்கெட்டில் விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னையில் குறைந்தபட்சமாக 1,700 முதல் 15,000 வரை அதிகாரப்பூர்வ விற்பனை நடைபெற்றது,ஆனால் பிளாக்கில் சில பேர் 50,000 முதல் 1,00,000 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை அதிகமாக இருந்தாலும் சில தீவிர ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்,இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதாவது சமூகவலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் “ என்னிடம் டிக்கெட்உள்ளது,உடனே DM பண்ணுங்க ” என விளம்பரம் செய்து,ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இதனை நம்பி ரசிகர்களும் நம்பிக்கையுடன் பணம் அனுப்பிய பிறகு,அவர்கள் தொடர்பு கொள்ளும் எண்கள் செயலிழக்கின்றன.இது குறித்து போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,ரசிகர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.