சத்தீஸ்கர் மாநில முதல்வர் குமரி வருகை

22 November 2020, 9:24 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி வருகை புரிந்த சத்தீஸ்கர் மாநில முதல்வரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி (பொறுப்பு)மணிவண்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகல் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். சன்செட்பாயின்ட் பகுதியில் சூரியன் மறையும் காட்சியை ரசித்த அவர் அங்கிருந்து கன்னியாகுமரி அரசுவிருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி (பொறுப்பு)மணிவண்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் நாளை காலை சூரிய உதயத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கார் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சத்தீஸ்கர் செல்கிறார்.சத்தீஸ்கர் மாநில முதல்வர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 1

0

0