பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு சிக்கன் பிரியாணி : பழமையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய உணவகம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2021, 4:18 pm
திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை பிரிவில் இன்று பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு ஒரு பார்சல் பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் சிறுமலை பிரிவவில், நத்தம் ரோட்டில் எப்.எஸ். பாபு ஓட்டல் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு பழைய ஒரு ரூபாய் ரூபாய் நோட்டுக்கு ஒரு பார்சல் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த சலுகை முதலில் வந்த 100 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
இதுகுறித்து கடை நிர்வாகி சபீர் அகமது கூறியதாவது: திண்டுக்கல் எப்.எஸ் ஓட்டல் முதல் கிளை பேகம்பூரிலும், இரண்டாவது கிளை ரயில்வே ஸ்டேஷனிலும் மூன்றாவது நிலையை சிறுமலை பிரிவிலும் துவங்கியுள்ளோம்.
பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அவருடைய சேமிப்பு ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் ஒரு ரூபாய் பழைய நோட்டுக்கு பார்சல் பிரியாணியை வழங்குகிறோம்.
அதே நேரத்தில் அரைபிளேட் பிரியாணி ஒரு 70 ரூபாய்க்கும், முழு பிளேட் ரூ 100 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. முழு பிளேட்டில் ஆம்பூர் பிரியாணி ஸ்பெஷலாக முட்டையுடன் சிக்கன் 65 இருக்கும். வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்ற எங்கள் பிரியாணி அதிகளவு வாடிக்கையாளர்களின் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
0
0