நாளை வெளியாகிறது ‘சிதம்பர ரகசியம் பார்ட் – 2‘ : ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!!

25 January 2021, 4:25 pm
chidambaram- Updatenews360
Quick Share

தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் நாளை சிதம்பரம் ரகசியம் பார்ட்-2 வெளியாகிறது என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி 48வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிதம்பரம் ரகசியம் பார்ட்-2 என்ற பெயரில் போஸ்டர் ஒன்று தமிழகம் முபவதும் உள்ளி முக்கிய மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை குடியரசு தினத்தன்று சிதம்பர ரகசியம் பார்ட்-2 வெளியிட போவதாக அறிவிப்பு உள்ளது. ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள ஊழல் பற்றி நாளை முறைகேடு பட்டியல் வெளியிடப்படலாம் என தகவல் பரவி வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல்கலை வேந்தர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 0

0

0