கோழிக்கோடு விமான விபத்து..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

8 August 2020, 11:29 am
Edappady 06 updatenews360
Quick Share

சென்னை: கோழிக்கோடு விமான விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிரங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கனமழையே இந்ம விமான விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் உள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:  கோழிக்கோடு விமான விபத்து பற்றிய செய்தியறிந்து மிகுந்த சோகமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போதுமான மன லத்தையும், காயமடைந்தவர்கள் விரைவாக மீட்கவும் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் என்று கூறி உள்ளார்.

Views: - 25

0

0