சூடான் தீ விபத்து: தமிழர்களின் நிலை என்ன? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

4 December 2019, 9:43 pm
EPS- updatenews360
Quick Share

சென்னை: சூடான் தீ விபத்தில் காணாமல் போன தமிழர்களின் நிலையை கண்டறிய நடவடிக்கை வேண்டும் என்று பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருப்பதாவது:

சூடானில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் காணாமல் போனதாக  கூறப்படுகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதை மத்திய அரசு கண்டறிய வேண்டும்.

அதற்காக, அங்கிருக்கும் இந்திய தூதரகம் மூலம் தமிழர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.