இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

8 September 2020, 12:34 pm
Quick Share

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இன்று அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் வரும் 14,15, 16 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

சந்திப்பில், பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வாதங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்த ஆளுநர்களின் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இது குறித்தும் ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிகிறது.

இந்த சூழலில், தமிழக எதிர்கட்சியான திமுகவின் பொதுச் செயலாளர் துறைமுருகன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டும் நடத்தப்படும் என்பது ஏற்கத்தகாதது எனவும், நாட்களை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 4

0

0