நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்..!!

Author: Rajesh
14 April 2022, 11:30 pm
Stalin Letter - Updatenews360
Quick Share

சென்னை: நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது எனத்தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின், நான் நேரில் சந்தித்து வலியுறுத்திய போது மசோதாவை அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்.

மசோதா பற்றி ஆளுநர் உறுதியான பதிலளிக்காததால் தேநீர் விருந்தில் பங்கேற்பது முறையாக இருக்காது. ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமுகமாகவும் இருக்கும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன், அரசியல் அமைப்பு சட்டப்படி கடமையை செய்யும்போது மக்களும் மாநிலமும் வளம் பெறும் என்றும் முதல் அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 593

0

0