அமராவதி அணையில் இருந்து 15ம் தேதி முதல் நீர் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

13 January 2021, 12:28 pm
amravathi dam - updatenews360
Quick Share

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாசன பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளின் இரண்டாம் போக பாசனத்திற்காக வருகிற 15ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை 260 மி.க. அடிக்கு மிகாமல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 8

0

0