“தமிழகத்திற்கே பெருமை“ : ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!!

8 November 2020, 11:49 am
CM Wish - Updatenews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றம் கமலா ஹாரிசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியில்ட ஜோ பைடன் வெற்றி உறுதியான நிலையில், கடும் இழுபறியால் வெற்றி தாமதமானது. இந்த நிலையில் நேற்று இரவு ஜோ பைடன் 284 வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வெற்றி உறுதியான நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உலக அரசியல் தலைவர்களிடமிருந்து அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்கும் இருவருக்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் 46வது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இந்த வெற்றியின் மூலம் தமிழகத்திற்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Views: - 21

0

0