கடலூருக்கு செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி : புயல் பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு!!

26 November 2020, 9:32 am
CM - Updatenews360
Quick Share

தமிழகத்தை மிரட்டி தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. அதி தீவிரப் புயலாக இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது.

மேலும் நிவர் புயலால் தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூரில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் பழனிசாமி செல்கிறார்.

இன்று பிற்பகல் கடலூருக்கு சென்று புயல் பாதிப்புகள் குறித்து நேரில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0