“ஜனவரி 27க்கு பிறகு எதுவும் மாறாது“ : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி!!
20 January 2021, 1:48 pmசசிகலா விடுதலையானால் எந்த மாற்றமும் இருக்காது என ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, குறைகளை கேட்கும் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார், எதுவுமே செய்யவில்லை, பொய் பேசும் ஸ்டாலினுக்க நோபல் பரிசு கொடுக் வேண்டும் என கூறினார்.
மேலம் ஸ்டாலின் உட்பட அனைவரின் வீட்டிற்கு இலவசமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சசிகலா விடுதலையான பிறகும் அதிமுக ஆட்சிதான் நடக்கும் என கூறறினார்.
முன்னதாக சசிகலா விடுதலையானால் அதிமுக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரை மூலம் பதலளித்துள்ளார்.
0
0