எளிமையால் ஏறுமுகத்தில் எடப்பாடியார்! நிவர் புயலால் மக்கள் மனதில் நிமிர்ந்து நிற்கும் முதலமைச்சர் பழனிசாமி!

27 November 2020, 8:24 pm
CM Edappadi - Updatenews360
Quick Share

நிவர் புயல் நடவடிக்கையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

எந்த பின்புலமோ எந்த கவர்ச்சியும் இல்லாமல் கட்சியின் சூழ்நிலை காரணமாக முதல்வரான எடப்பாடி பழனிசாமி, மக்கள் மத்தியில் முதலில் எந்த எதிர்பார்ப்பில்லாமல் இருந்தார்.

அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு, செய்தியாளர் சந்திப்பு - பப்ளிக் ஜஸ்டிஸ்

எடப்பாடி யார்? அவரின் தலைமை, ஆட்சி ஆளுமையுடன் இருக்குமா, அரசு நீடிக்காது என பல்வேறு கேள்விகள் அவரை சுற்றினாலும், எந்த சூழலிலும் எந்த சுழலிலும் சிக்காமல் அரசை திறம்பட நிர்வகித்து கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து ஆட்சியையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளார்.

ஊரடங்கு, கொரோனா வைரஸ், வேலை இழப்பு: சென்னையைவிட்டு கொத்து கொத்தாக வெளியேறிய  மக்கள் - BBC News தமிழ்

தமிழகத்தில் சாதனைகள் சில படைத்தாலும் அவருக்கு இயற்கையாக வந்த சோதனை தான் கொரோனா. படுவேமாக பரவிய கண்ணுக்கு தெரியாத கிருமியை ஊரடங்காலும், மருத்துவ வசதியாலும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

Zee News: Latest News, Live Breaking News, Today News, India Political News  Updates

என்னதான் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதத்தில் அனைத்து மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, கொரோனா நிர்வாகத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசிடம் பாராட்டை பெற்றது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஆணையை வழங்கினார் முதலமைச்சர்  பழனிசாமி | Dinamalar

‛நிவர்’ புயலை தமிழக அரசு சமாளித்த விதம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. உண்மையில், புயல் உருவான போதே, அதுவும் தமிழகத்தை தாக்கப்போகிறது என்ற தகவல் வந்ததும் பலருக்கும் பீதி ஏற்பட்டது.

கஜா புயலை போன்று இல்லாவிட்டாலும், நிவர் புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்த விதம் பாராட்டை பெற்று வருகிறது.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதால் 'நிவர்' புயலால்  தமிழகத்தில் குறைவான பாதிப்பு: கடலூரில் சேதங்களை பார்வையிட்ட ...

செம்பரம்பாக்கம் ஏரி, திறப்புக்கு முன்னர், தகுந்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்தது. செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பை கொட்டும் மழையில் முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். குடையை கூட அவர், தானே பிடித்து கொண்டே சென்றார். புயல் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் பேசிவிட்டு, அதிகாரிகளை எழுந்திருக்க வைக்காமல் உங்களை நான் தொந்தரவு செய்யமாட்டேன், உங்கள் வேலைகளை பாருங்கள் என அமர சொன்னார்.

https://tamil.oneindia.com/news/puducherry/heavy-rains-caused-by-nivar-storm-flooded-puducherry-power-cut-404179.html  2020-11-26T01:25:21+05:30 0.7  https://tamil.oneindia.com/img/2020/11/rain234-1606328489.jpg நிவர் புயலால்  ...

இப்படி ஒவ்வொரு வேலையையும் கண்கூடாக பார்த்து பார்த்து செய்தார். காலில் விழும் கலாச்சாரத்தை மாற்றி முதலமைச்சர் பழனிசாமியின் எளிமையை கண்டு அரசு அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு, தற்போது மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் இந்த எளிமை அரசன் எடப்பாடியார்.

Views: - 28

0

0