முதலமைச்சர் பழனிசாமி நாளை டெல்லி பயணம் : ஜெ., நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு!!

17 January 2021, 3:50 pm
CM Modi -Updatenews360
Quick Share

சென்னை : ஜெ நினைவிட திறப்பு விழாவிற்காக நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடி அழைப்பு விடுக்கிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நினைவிடத்தை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை டெல்லி பயணம் செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, நாளை மறுநாள் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும்படியும் அழைப்பு விடுக்க உள்ளார்.

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம், பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்.எல்.சி. 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம்- தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைக்கும் படி அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

மேலும் ஜெ நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கட்சி பொதுக்குழுகூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக பிரதமரை சந்திக்க உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 10

0

0