வரும் 4ஆம் தேதி சிவகங்கை செல்லும் முதலமைச்சர் பழனிசாமி : மதுரையில் முக்கிய திட்டத்திற்கும் அடிக்கல்!!

29 November 2020, 11:38 am
CM Sivagangai - Updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 4ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி சிவகங்கை பயணம் செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்புகள் குறைந்து வருகிறது.

மேலும் கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாவட்ட வாரியாக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 4ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்.

சென்னையில் இருந்து 4ஆம் தேதி மதுரைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அடிக்கல் நாட்டுகிறார்.

மதுரை மாநகரில் 24மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு கொரோன பரவல் தடுப்பு குறித்த ஆய்வுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Views: - 0

0

0