திருப்பூருக்கு வருகை தரும் முதலமைச்சர் பழனிசாமி : பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனை!!

4 November 2020, 8:38 pm
Pollachi Jayaraman- Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூருக்கு வருகிற ஆறாம் தேதி வருகை தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிப்பது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக நகர ஒன்றிய கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள பயணியர் தங்கும் அறையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பேசுகையில் வருகின்ற ஆறாம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருப்பூருக்கு வருகை தர உள்ளதால் தாராபுரம் பகுதியில் இருந்து அதிமுக தொண்டர்கள் திருப்பூருக்கு வருகை தந்து சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் அதிமுக நகர கழக செயலாளர் காமராஜ் ஒன்றிய செயலாளர் சின்னப்பன் குண்டடம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் தாராபுரம் 30 வார்டு நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 18

0

0