2021-22ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்: தமிழக முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு..!!

1 February 2021, 5:26 pm
cm palanisamy vs budget - updatenews360
Quick Share

சென்னை: 2021-22ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு சலுகைகள் இடம் பெற்றன. இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி கூறியதாவது, மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன.

மதுரை கொல்லம், சித்தூர்- தச்சூர் சாலைத் திட்டங்கள் தமிகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். புதிய மெட்ரோ லைட், மெட்ரோ நியோ திட்டங்களை கோவை, மதுரையில் செயல்படுத்த ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 0

0

0