வருமுன் காப்போம் திட்டம் : தனி விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2021, 9:53 am
Salem CM Stalin - Updatenews360
Quick Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து வாழப்பாடி செல்லும் அவர் அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து தொடங்கி வைக்கிறார்.

அதனைத்தொடர்ந்து ஆத்தூருக்கு செல்லும் அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் வருவதையொட்டி, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 249

0

0