ரஜினியை சந்திக்க மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் : உடல்நலம் பற்றி நலம் விசாரிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2021, 11:57 am
Stalin Meet Rajini - Updatenews360
Quick Share

சென்னை : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த 28-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடிரென தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டது.

இதையடுத்து, ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

மூன்றாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்தது. ரஜினிக்கு எடுக்கப்பட்ட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளிலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரஜினி நன்றாக பேசுவதோடு, உணவு எடுத்துக் கொள்கிறார் மற்றும் அன்றாட பழக்கங்களை செய்கிறார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே,ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.

Views: - 413

0

0