சென்னையில் ‌ஆக்சிஜன்‌ படுக்கை வசதிகளை கூடுதலாக அமைக்க முதலமைச்சர்‌ அறிவுறுத்தல்

7 May 2021, 8:16 pm
Quick Share

சென்னை: சென்னை மாநகரப்‌ பகுதியில்‌ ஆக்சிஜன்‌ படுக்கை வசதிகளை கூடுதலாக அமைக்க முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவுறுத்தியுள்ளார்‌.

சென்னை நந்தம்பாக்கத்தில்‌ உள்ள சென்னை வர்த்தக மையத்தில்‌ பெருநகர சென்னை மாநகராட்சியால்‌ அமைக்கப்பட்டுவரும்‌ கோவிட்‌ பராமரிப்பு மையத்தை முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ பார்வையிட்டார்கள்‌. இதையடுத்து பேசிய முதலமைச்சர், இம்மையத்தில்‌ முதற்கட்டமாக 300 படுக்கைகளும்‌ அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும்‌ என மொத்தம்‌ 800 படுக்கைகள்‌ அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படுக்கைகளுக்கு ஆக்சிஜன்‌
வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர்‌ கொள்ளளவுக்‌ கொண்ட ஆக்சிஜன்‌ சேமிப்பு நிலையம்‌ அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும்‌ 300 படுக்கைகள்‌ 10-05-2021 முதல்‌ செயல்படும்‌.

அரசு இராஜீவ்‌ காந்தி மருத்துவமனையில்‌ இருந்தும்‌, அரசு ஓமந்தூரார்‌ மருத்துவமனையில்‌ இருந்தும்‌, இம்மையத்திற்கான மருத்துவர்களும்‌ செவிலியர்களும்‌ பணியமர்த்தப்படுவார்கள்‌. இம்மையத்திற்கான உணவு மற்றும்‌ பராமரிப்புப்‌ பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும்‌.என்றார். அப்போது நகர்புற வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு‌, ஊரகத்‌ தொழிற்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌, வணிகவரித்‌ துறை ஆணையர்‌ / முதன்மைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ கோவிட்‌-19 கண்காணிப்பு அலுவலர்‌ எம்‌.ஏ. சித்திக்‌, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ கோ. பிரகாஷ்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Views: - 67

0

0