அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சரின் SURPRISE GIFT : விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!

5 February 2021, 12:24 pm
CM Announce - Updatenews360
Quick Share

சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் அடுத்த ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அரசு ஊழியர்களில் சில அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் கடந்த பிப்.,2ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக முலமைச்சர் அறிவித்திருந்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு இன்னொரு அறிவிப்பையும் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட உள்ளார். அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்புக்கான கோப்புகளில் முதலமைச்சர் பழனிசாமி கையெழுத்திட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஆண்டொன்றுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0