இந்தியா வல்லரசு ஆவதை தடுக்கவே கொரோனா..! புது காரணம் சொல்லும் இயற்கை சித்தர்.! (வீடியோ)

26 March 2020, 5:48 pm
Salem Sittar - Updatenews360
Quick Share

சேலம் : இந்தியா வல்லரசு ஆவதை தடுக்கவே சீனா கொரோனாவை பரப்பியுள்ளதாக இயற்கை சித்தர் ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக நாடுகளையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி பல நாடுகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட, மதுரையைச் சேர்ந்த இயற்கை சித்தர் ராமலிங்கம் என்பவர், இந்தியா வல்லரசு ஆவது பிடிக்காமல் சீனா செய்த சூழ்ச்சியே இந்த கொறோனா உயிர்கொல்லி க்கு காரணம் என்றும் நாடு விட்டு நாடு சென்ற இந்தியாவைச் சேர்ந்த போகர் என்ற சித்தர், தனது ஏட்டில் நன்மைகள் குறித்தும் தீமைகள் குறித்தும் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.

அவர் எழுதி வைத்த ஏடு சீனர்கள் கையில் கிடைத்ததால் அதனை சோதித்து பார்க்கும் போது, ஏற்பட்ட விளைவே உலக மக்கள் உயிரிழப்பிற்கு காரணம் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைத்தபோது அது அவர்களுக்கே வினையாக மாறியது என்று கூறியவர், இதற்கு ஆங்கிலத்தில் மருந்து பொருட்களை இல்லை என்றும் இதற்கு ஒரே தீர்வு நாமும் நமது சுற்றுப் புறமும் சுகாதாரமாக வைத்துக் கொண்டு நாள்தோறும் மதத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு பிடித்தமான கடவுள்கள் குறித்து வழிபட்டாலே இந்த நோயில் இருந்து நாம் முழுமையாக விடுபடலாம் என்றும் தெரிவித்தார்.