மலைகளின் ராணியை காண வந்த சீன அரசி : உதகையில் பூத்த சீன மலர்கள்!!

Author: Udayachandran
2 February 2021, 11:40 am
Bowlonia Flower - Updatenews360
Quick Share

நீலகிரி : ஊட்டி பூங்காவில் சீனாவின் அரசி என்று அழைக்கப்படும் பவுலோனியா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. அதே போல் ஆயிரக்கணக்கான மலர்களும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் சீனாவின் தாயகமாகக் கொண்ட பவுலோனியா மரத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் உள்ள இந்த மலர்கள் அந்தகாலத்து கிராமபோன் போன்று கூம்பு வடிவில் உள்ளன. மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி பூங்காவில் 3 லட்சம் மலர் நாற்றுக்கள் இப்போது பயிரிடப்பட்டு உள்ளன இதனால் அங்கு மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த சமயத்தில் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தளிக்கிறது . பவுலோனியா மலர்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களும் உள்ளன.உலகிலேயே அதிவேகமாக வளரும் மரமாக இது உள்ளது.

சாதாரணமாக ஒரு மரம் தன் முழு வளர்ச்சியைப் பெற 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும் ஆனால் இந்த மரம் 5 முதல் 7 வருடங்களில் முழு வளர்ச்சி அடைந்து மக்களுக்குப் பயன்தரும் இந்த மரம் எடை குறைவாகவும் அதிக பலம் வாய்ந்ததாகவும் இருப்பதால் இந்த மரத்தின் மூலம் மேஜை நாற்காலிகள், இசைக்கருவிகள், கப்பல் கட்டுதல், விமான சேவையில் அதிக அளவு பயன்படுகிறது.

இந்த மரம் சீனாவில் கோடிக்கணக்கில் இருந்தாலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன . புதிதாக திருமணமான ஜப்பான் தம்பதியர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக அவர்கள் செய்யும் முதல் வேலை தங்கள் வீட்டருகே ஒரு பவுலோனியா மரத்தை நடுவது வழக்கம்.

பெண்பிள்ளை வளர்ந்து திருமண வயதை எட்டும்போது அந்த மரமும் முழு வளர்ச்சி அடைந்திருக்கும். அப்போது ஜப்பான் தம்பதியர் தங்களது மகளின் திருமணத்தின் போது பவுலோனியா மரத்தை வெட்டி அதில் வீட்டுக்கு தேவையான மேஜை நாற்காலிகளை அழகாக வடிவமைத்து தங்களது பெண்ணிற்கு சீதனமாக தருவார்களாம்.

சீன நாட்டில் இப்போது கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிர்ழப்புகள் நேர்ந்து வரும் இந்த சமயத்தில் சீனாவின் அரசி என்று அழைக்கப்படும் பவுலோனியா மரத்தில் மலர்கள் பூத்து இருப்பது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

Views: - 65

0

0