‘விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜெபயாத்திரை நடத்துவோம்’: மத மோதல்களை தூண்டுவதாக புகார்…கோவையில் பாதிரியார் கைது!!

Author: Aarthi Sivakumar
2 September 2021, 10:06 am
Quick Share

கோவை : கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மத மோதல்களைத் தூண்டும் விதமாக செயல்பட்டதாக
இந்து முன்னணியினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை தடாகம் சாலையில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரி நிர்வாகியும் பாதிரியாராகவும் இருப்பவர் டேவிட். இவர் மீது இந்து முன்னணியின் கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் என்பவர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பது, பாதிரியார் டேவிட் தனது லெட்டர் பேடில் “செப்டம்பர் 10ம் தேதி இந்துக்கள் விநாயக சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். அதே தினத்தில் மத ஜெப யாத்திரை என்ற பெயரில் நாமும் யாத்திரை நடத்துவோம். கடந்த மூன்று ஆண்டுகளாகவே யாத்திரை நடத்தியதால் தான் விநாயகர் சதுர்த்தி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முறையும் எப்படியாவது ஜெபயாத்திரை நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதூர்த்திக்கு தடை விதித்திருப்பதும், கிறிஸ்தவ பாதிரியாரின் இந்த பிரச்சாரமும் திட்டமிட்டு நடக்கிறதோ என்று தெரிகிறது. எனவே இவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருத்தார். இந்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் பாதிரியார் டேவிட்டை இன்று காலை 5 மணிக்கு கைது செய்துள்ளனர்.

மேலும் 11 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்து முன்னணியினர் அளித்த புகாரின்பேரில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 326

0

0