‘குடுத்த காசுக்கு மேல கூவற’ : விளக்கமளித்தும் ட்ரெண்டிங்கில் #சங்கி_சீமான்.. அனல் பறக்கும் மீம்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 7:13 pm
Seeman - Updatenews360
Quick Share

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று சீமான் கூறியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சீமான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் பேச்சுகள் பெரும்பாலும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களும் நடைபெற்று பேச்சுப்பொருளாவது வழக்கம்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பனைச்சந்தை திருவிழாவில் கலந்துக் கொண்ட சீமான் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் சீமான், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார் என சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து சீமான் டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். நாங்கள் தமிழர்கள். எங்கள் சமயம் வேறு. எங்கள் வழிபாட்டு முறை வேறு. எங்கள் தெய்வங்கள் வேறு. எங்கள் சமயமே வேறு. இதில் உறுதியாக இருக்கிறேன். அதை மீட்டெடுப்பதை துவக்குகிறேன், அதில் வெல்வது வேறு, மீட்டெடுக்கும் போது என்னுடைய சமயம், மெய்யியல் கோட்பாடு என அனைத்தையும் சேர்த்துதான் மீட்டெடுப்பேன். அதில் நாங்கள் சைவர்கள். சிவன், முருகனை வழிபடுகிறவர்கள்.

Image

இன்றைக்கு சட்டப்படி இந்து என்கிறீர்கள். அன்றைக்கு சிவசமயம் என்றுதான் எழுதி இருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுவதால் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். மாயோன் என்கிற கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதை தூய தமிழில் மாலியம் என்கிறோம். இப்படியாகத் தான் சமயங்கள் இருந்திருக்கிறது. வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பௌத்தன், சீக்கியன், சைவன், பார்சி என நாங்க எல்லாரும் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து அல்ல. வெள்ளைக்காரன்போட்ட சட்டப்படி இந்து. அதனை நான் ஏற்கவில்லை, எதிர்க்கிறேன். அவ்வளவு தான் என்கிறார்.

Image

இந்த நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் #சங்கி_சீமான் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீமான் குறித்து மீம்ஸ்களும் அனல் பறக்கிறது.

Image

Views: - 274

0

0