கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவில் மோதல் : பேனர் வைப்பதில் திமுக மேயரின் கணவருக்கும் வார்டு உறுப்பினருக்கும் தகராறு!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 6:16 pm
Cbe DMK - Updatenews360
Quick Share

கோவை கணபதி மணியகாரம்பாளையம் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு அலங்கார வளைவுகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் கொடி போன்றவற்றை வார்டு செயலாளர் குமார் தலைமையில் அமைக்கப்பட்டு வந்த நிலையில் எந்த வித ஏற்பாடுகளும் மற்றும் கொடிகளும் கட்டக் கூடாது என்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவரும் மாவட்ட தி.மு.க பிரதிநிதியுமான ஆனந்தகுமார் வார்டு செயலாளர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் கோவை மாநகராட்சி 30வது வார்டு உறுப்பினர் மேயரின் சகோதரியுமான சரண்யாவின் கணவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு 10 மேற்பட்ட அடியாட்களுடன் வந்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்து கண் மூடி தனமாக தாக்கத் தொடங்கினார்.

இதில் பால்ராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மணிகாரம் பாளையத்தில் காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Views: - 163

0

0