திருப்பூர் அருகே தமிழக – வடமாநில இளைஞர்களுக்கு இடையே மோதல் : இருவர் மருத்துவமனையில் அனுமதி!!!

Author: Udayachandran
26 July 2021, 4:14 pm
Tirupur Fight- Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே அருள்புரத்தில் குடிபோதையில் தமிழக – வடமாநில இளைஞர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அருள்புரம் அடுத்த சேகராம்பாளையத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் பிரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை 5 மணி அளவில் குமரவேல் குடோனுக்கு அருகில் உள்ள குட்டையில் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மது அருந்துவதற்காக அமர்ந்திருந்த போது அங்கு பணிபுரியும் வடமாநில இளைஞர் களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் மோதலாக மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். 60 க்கும் மேற்பட்ட அருள்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் வடமாநில இளைஞர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதலில் காயமடைந்த கமல சங்கர் என்ற வடமாநில இளைஞர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இரவு பதினோரு மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விடுமுறை நாட்களில் வடமாநில இளைஞர்கள் மது அருந்திவிட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் விடுமுறை நாட்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 452

0

0