அரக்கோணம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் : புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் அடித்து கொலை!!

8 April 2021, 10:55 am
Ranipet Dead -Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே இரு பிரிவினருக்கு ஏற்பட்ட மோதலில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அர்ச்சுனன் (வயது 23), திருமணமாகி 10 நாட்களே ஆன புதுமாப்பிளை சூர்யா (வயது 24) , மதன்(வயது 16) மற்றும் வல்லரசு (வயது 21) ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை 6 மணியளவில்அருகில் உள்ள குருவராஜப்பேட்டையில் கடை ஒன்றில் இருந்துள்ளனர்.

அப்போது இவர்களுக்கும் பக்கத்து ஊரான பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மாற்று சமுதாயந்தைச் சார்ந்த சில நபர்களுக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 8மணியளவில் பெருமாள்ராஜபேட்டை பேருந்து நிலையம் அருகே சென்ற சோகனூரைச் சேர்ந்தவர்கள் அர்ச்சுன்ன்,சூர்யா,மதன் மற்றும் சௌந்தர் ஆகியோரை பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த சுமார் 20 க்குமேற்பட்ட கும்பல் அர்சுனன், சூர்யா, மதன் மற்றும் சௌந்தர் ஆகிய நால்வரையும் கத்தி, இரும்பு கம்பி பாறாங்கல் ஆகியவற்றால் கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம.குறித்த தகவலறிந்த சோகனூர்மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன், சூர்யா ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலூக்கா போலீஸார் வழக்குபதிந்து கொலை குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்

மேலும் இச்சம்பவம் அரக்கோணம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பளர் சிவகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் சோகனூர் மக்கள் இரவு முழுவதும் கொதிப்படைந்து சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க 50க்கும் மேற்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 5

0

0