ஒரு பக்கம் வகுப்பு.. மறுபக்கம் ஓவியம் : மாற்றத்திற்கான விதையாகும் மாணவன் மாரிமுத்து.. வியப்பை ஏற்படுத்தும் கைவண்ணம்!

2 July 2021, 11:59 am
Kodai Student - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரங்களில் தத்ரூபமாக ஓவியங்கள் வரைந்து பொழுதை போக்கும் கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரிமுத்து. கொரோனா ஊரடங்கினால் ஆன்லைன் மூலம் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகிறார்.

தற்போது ஊரடங்கினால் மாணவ மாணவிகள் செல்போன் மற்றும் டிவிகளில் பொழுதுகளை போக்கி வருகின்றனர். இதில் மாற்றாக இருந்து வரும் மாரிமுத்து தன் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டு இருந்தார்.

கொரோனா ஊரடங்கில் படிப்பை தொடர்ந்து பயனுள்ளதாக இருக்க நினைத்த இவர் தினசரி ஓவியம் வரைய தொடங்கினார். இதில் தலைவர்களின் புகைப்படம், கடவுள்களின் இயற்க்கை எழில் காட்சிகள், நடிகர்களின் புகைப்படம், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வாட்டர் கலர் மற்றும் கலர் பென்சில்கள் மூலம் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பை முடித்த பிறகு பயனுள்ளதாக மாற்ற நினைத்த அடுத்த இலக்காக ஓவியத்தில் உலக கின்னஸ் சாதனை பெற வேண்டுமென முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு ஓவிய கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 132

0

0