அக்.4 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!!

Author: kavin kumar
30 September 2021, 8:58 pm
College students - updatenews360
Quick Share

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு நேரடி வகுப்புகள் வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிலையங்களும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புக்கள் நடந்து வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் வெகுவாக குறைந்து வருகின்றன. இதையொட்டி தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது, அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே.

அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கள் வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிவடையவில்லை. எனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இன்று கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து உள்ளது.எனவே அக்டோபர் 4 முதல் முதலாமாண்டு வகுப்புக்கள் உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் நேரிடையாக தொடங்குகிறது..கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 210

0

0