சுத்தமானது ஆழ்க்கடல் : கடலுக்கு அடியில் நீச்சல் வீரர் எடுத்த அரிய காட்சி!

By: Udayachandran
3 October 2020, 4:42 pm
Clear Sea - updatenews360
Quick Share

புதுச்சேரி : கொரோனா ஊரடங்கில் காற்று தூய்மை அடைந்திருப்பது போல் ஆழ்கடலும் சுத்தமாகி இருக்கிறது.

கடற்கரையில் காணப்படும் குப்பைகளை போல கடலுக்கு அடியில் ஏராளமான குப்பைகள் காணப்படுகின்றன. ஆண்டிற்கு 8 பில்லியன் மெட்ரிக் டன் குப்பை கடலில் சேருகிறது. இதனை அப்புறப்படுத்த உலக முழுவதும் சுற்றுப்புற ஆர்வலர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில் தற்போது ஆழ்கடல் சுத்தமாக காணப்டுகிறது.கடல் நீர் சுத்தமாக இருப்பதுடன் பிளாஸ்டிக் பொருட்களின் அளவு சென்னை-புதுச்சேரி கடற்பகுதியில் குறைந்து விட்டது.

இதனை புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பார்சல்களை குறைத்து இருப்பதால் வாகன போக்குவரத்து குறைந்திருப்பதால் ஆழ்கடல் சுத்தமாகி இருக்கிறது.

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாசுவை இயற்கை தானாகவே சரி செய்து கொண்டுள்ளது. இதனை மக்கள் படிப்பினையாக கொண்டு கடலில் குப்பை சேருவதை தடுக்க வேண்டும் என அரவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 41

0

0