அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!!
மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசு இவ்வாறு கூறினார்.
மேலும், என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அது உயிரிழப்புக்கு ஈடாகாது, மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல்துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலர் ஈடுபடுகின்றனர் என்று கூறிய திருநாவுக்கரசர், தமிழக அரசு தனிப்படையை கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.
அரசை பொருத்தவரை இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள், குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள் என்றவர், எவ்வளவுதான் நிவாரணம் கொடுத்தாலும் தாய்க்கு தன் மகனின்இழப்பு தாங்க முடியாத பேரிழப்பாகும் என்று கூறினார்.
காவல்துறையில் மேலதிகாரிகள் இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை மாறாக, கீழ் மட்டத்தில் உள்ள காவலர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தவர்,விசாரணையின் போது மனிதாபிமானமாக நடந்து கொள்வதற்கான பயிற்சியை காவலர்களுக்கு வழங்க வேண்டும்.
கொலைக்காக கொடுக்கப்படும் நஷ்ட ஈடு பரிகாரமாகாது என்றும் கூறினார். கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்து வருவதாக கூறியவர், அதற்காக அரசை குற்றம் சொல்ல தேவையில்லை என்றும், அடியாள் வேலை பார்ப்பதற்காகத்தான் போலீசார் பணிபுரிகிறார்களா? அதற்காகத்தான் சம்பளம் பெறுகிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அஜித் குமார் கொலை சம்பவத்தில் தேவையான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆனால்,இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.
ஒரு உயிரிழப்பிற்கு 200 கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்றவர், நிகிதா பொய்யாக புகார் கொடுத்திருந்தால் அவர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை கேட்டுக்கொண்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.