மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

6 August 2020, 9:46 pm
edappadi palanisamy erode - UpdateNews 360
Quick Share

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

கொரோனா தொற்றுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய  திண்டுக்கல், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அவர் திண்டுக்கல் சென்று நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் மதுரை சென்று நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வடபழஞ்சியில் கொரோனா சிகிச்சை நல மையத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் அவர் பேசியதாவது: மதுரையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அறிய வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். காய்ச்சல் முகாம்கள் நடத்துவதே கொரோனா தொற்று குறைய காரணமாகும். முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயாராக இருக்கின்றன என்று கூறினார். 

Views: - 0

0

0