திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் முன்னோடியான தமிழகம் : சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!! (வீடியோ)

30 September 2020, 1:07 pm
Cm inaugurate - updatenews360
Quick Share

சென்னை : நாட்டிலே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

சென்னையை மாசற்ற நகரமாக்கும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாட்டிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தை, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7 மண்டலங்களில், அடுத்த 8 ஆண்டுக்கு குப்பை சேகரிக்கப்படும். மொத்தம் 62 வார்டுகளில் இருக்கும் 16,621 தெருக்களில் உள்ள வீடுகளுக்குச் சென்றே குப்பைகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 10

0

0