வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி

18 November 2020, 12:57 pm
Quick Share

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 84வது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து பதிவிட்டுள்ளார்.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் இவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேவேளையில், சமூக வலைதளங்களில் இவரது பெருமையை சுட்டிக்காட்டி கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.க்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து பதிவிட்டுள்ளார்.

அதாவது, “ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 36

0

0

1 thought on “வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி

Comments are closed.