பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் வாழ்த்து

5 August 2020, 11:40 pm
Edappady 06 updatenews360
Quick Share

சென்னை: 2019ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களை, சம்பந்தப்பட்ட துறைகளில் பணியமர்த்துகின்றனர்.அந்த வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 829 உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்., மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழக அளவிலான சிவில் சர்வீசஸ் தேர்வில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பெற்றார். இந்த தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளியான மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த பூரண சுந்தரி பெண் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி 2019ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 2019ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வணையம் நடத்திய சிவில் சர்வீசஸ்தேர்வில் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவிப்பதாக கூறினார். மேலும் பார்வை மாற்றுத்திறனாளியான மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னையை சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இருவரும் சர்வீசஸ் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைவதாக கூறிய அவர்,

           "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
               மெய்வருத்தக் கூலி தரும்" 

என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப பூரண சுந்திரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகிய இருவரின் மன உறுதியும், விட முயற்சியும் தான் அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டதாக தெரிவித்தார்.

மேலும் சிவில் சர்வீசஸ் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் மக்கள் சேவையே மக்கள் சேவை என்ற அடிப்படையில் கடைமைகளை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் , அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் பூரண சுந்திரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக என்பதில் ஐயமில்லை என்றும், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற் பெற்றுள்ள அனைவருக்கும் தனது உளமர்ந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவிப்பதாக கூறினார்.