பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
8 September 2021, 10:56 pm
MK stalin 1- updatenews360
Quick Share

சென்னை: தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்பதுபோல் பகுதியை சேர்ந்த பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வருணின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- “தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த் – அகல்யா தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வ.வருண் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்த்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.இந்தக் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Views: - 148

0

0