குமரிக்கு முதல்வர் வருகை :நாகர்கோவிலில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

9 November 2020, 9:46 pm
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கவுள்ள நிலையில், நாகர்கோவிலில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கும் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவிலுக்கும் வருகிறார்.

நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்திற்குப் பின் இரவு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை தூத்துக்குடிக்கு செல்கிறார் தமிழக முதல்வரின் நிகழ்ச்சியை ஒட்டி அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தற்போது 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆயிரத்து 400 போலீசார் இப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும் முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஏற்கனவே குறைவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இல்லை என்ற சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். முதல்வர் வருகையையொட்டி அவர் வரும் பகுதியில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது

Views: - 15

0

0