சிறுபான்மையின மக்களுக்கும், தி.மு.க.விற்கும் தொப்புள் கொடி உறவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து!

13 May 2021, 3:25 pm
Stalin invite - Updatenews360
Quick Share

சென்னை : இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்படான அனைத்து மத சகோதரத்துவம்‌ என்றென்றும்‌ நீடித்து நிலைத்திருக்கும்‌ வகையில்‌, இயதப் பெருநாள் அமையட்டும்.

சிறுபான்மை சமுதாய மக்களுக்கும்‌, தி.மு.க என்றும்‌ தொப்புள்‌ கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களும்‌, நானும்‌ என்றும்‌ இஸ்லாமிய சமுதாய மக்களின்‌ மேல்‌ பேரன்பு கொண்டவர்கள்‌.

தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும்‌ பாதுகாப்பு அரணாக விளங்கும்‌ என்பதை
உறுதிப்படுத்த விழைகிறேன்‌. பேறிடரிலிருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப்‌ பெருதாள்‌ துணையாகட்டும்‌!, என தெரிவித்துள்ளார்.

Views: - 174

0

0