ரூ.275 கோடியில் நலத்திட்ட பணிகள்…! நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடங்கி வைத்த முதலமைச்சர்

7 August 2020, 2:34 pm
edappadi palanisamy erode - UpdateNews 360
Quick Share

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 275 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

முன்னதாக நிகழ்ச்சியில், ரூ. 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். சில புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். வீட்டு மனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், விவசாய எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தென்காசி ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 8

0

0