ஜுலை 1ல் முதலமைச்சர் கரூர் வருகை… கட்டுப்பாடுகளை அதிகரித்த மாவட்ட நிர்வாகம் : டிரோன் மூலம் வீடியோ எடுக்கத் தடை

Author: Babu Lakshmanan
29 June 2022, 9:27 pm
CM Stalin - Updatenews360
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி கரூர் மாவட்ட எல்லைக்குள் டிரோன் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வரும் 01.07.2022 மற்றும் 02.07.2022 அன்று வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளதால், கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம், புகளூர் மற்றும் கரூர் நகரப்பகுதி எல்லைக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட நாட்களில் டிரோன்கள் (Drone) மூலம் வீடியோ பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது, என கரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 184

1

0