கோப்ரா படத்தில் விக்ரம் இத்தனை கெட்அப்பில் வருகிறாரா.? வெளியான தகவல்..!

Author: Rajesh
16 May 2022, 12:00 pm
Quick Share

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப். 2 படத்தில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னரே கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தியதில் அதிக செலவை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கோப்ரா படத்தை ஆகஸ்ட் மாதம் 11-ம்தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படத்தில் 20 தோற்றத்தில் நடிகர் விக்ரம் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விக்ரமுக்கு சொல்லுக்கும் படியாக படங்கள் ஏதும் அமையவில்லை. சுமாரான வரவேற்பை பெற்ற மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இதனால் கோப்ரா மீதான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் இடம்பெற்றிருந்தார். சில காரணங்களுக்காக இந்த படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிக் கொண்டே போகிறது.

Views: - 548

0

0