கொடைக்கானலில் பூத்தது காபி பருவம் : விவசாயிகள் மகிழ்ச்சி!!

7 May 2021, 11:03 am
Coffee - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் காபிச் செடிகளில் பூக்கும் பருவம் ஆரம்பித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி பகுதிகளில் அராபிகா எனும் காபி வகை அதிகளவில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறன.

கடந்த 2 நாட்களாக பெய்த கோடை மழையால் காபி செடியில் பூக்கள் பூத்துள்ளன. பிப்ரவரி மாதத்தில் காபி செடியில் அறுவடை முடிந்த பின்பு, காபி செடியில் பூ மொட்டுகள் அரும்பும். ஏப்ரல், மே மாதங்களில் பொழியும் மழையில் முதிர்ந்த மொட்டுகள் மலர ஆரம்பிக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் காபி செடி பயிரிடப்பட்டிருந்தால் அதில் ஏப்ரல் மாத மழையில் 10 சதவிகித முதிர்ச்சி அடைந்த பூ மொட்டுகள் மட்டுமே பூப்பூக்கும். பின்பு மே மாதத்தில் மூன்று முறை பொழியும் மழையில் 40 சதவீதம், 70 சதவிகிதம் என படிப்படியாக பூக்கள் பூக்கும்.

ஏப்ரல் மாதத்தில் முதலில் பூக்கும் பூக்கள் காய்களாக வளர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். அதனையடுத்து மே மாதத்தில் பூக்கும் பூக்கள் காய்களாக வளர்ந்து டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை அறுவடை செய்யப்படும். இந்த ஆண்டு கோடை மழை பெய்து ஆபீஸ் செடிகளில் பூக்கள் பூத்து அதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 91

0

0