கோவையில் இன்று அரசு அதிகாரி உட்பட 292 பேருக்கு கொரோனா.! இதுல உங்க ஏரியாவும் இருக்கா? (முழு விபரம்)

10 August 2020, 8:19 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை : கோவையில் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலக பெண் பணியாளர் உள்பட 292 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் மதுக்கரையைச் சேர்ந்த 40 வயது பெண் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்துள்ளார். இதில் பெண் அலுவலருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டு மற்ற அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பி.ஆர்.எஸ். காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் 15 பெண் பயிற்சி காவலர்களுக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர செல்வபுரத்தில் 18 பேர், போத்தனூரில் 15 பேர், பி.என்.புதூரில் 13 பேர், குனியமுத்தூரில் 8 பேர், பீளமேட்டில் 7 பேர், இடையர்பாளையம், வடவள்ளி, பொன்னையராஜபுரம், வெள்ளக்கிணரில் தலா 6 பேர், பி.என்.பாளையம், கோவைப்புதூரில் தலா 5 பேர் உள்பட மாவட்டத்தில் 111 பெண்கள், 181 பெண்கள் சேர்த்து 292 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரு நாளில் கோவையில் 7 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.