கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது:ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

Author: kavin kumar
25 October 2021, 7:43 pm
Quick Share

கோவை; கோவையில் கஞ்சா விற்பனை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டக் காவல் துறையினர் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை (DAD) என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சோதனையில் ஈடுபட்டு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சூலூர் காவல் நிலைய போலீசார் இன்று சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா (26), மணி விக்னேஷ்(19), சிவக்குமார் (20) ஆகியோர் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 1.100 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Views: - 303

1

0